
posted 1st December 2022
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் முன்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சின் சிறுவர் செயலக அனுசரணையில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட. பதின்நான்கு முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் எம் . ஜீவராஜ், நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ. அமலதாஸ், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் டீ . ரொசாய்ரோ, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர். நித்தியா, பெண்கள் அபிவிருத்தி கள உதவியாளர் ஏ. எல். நஸ்ரின் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். அபராஜினி ஆகியோருடன் முன்பள்ளி பாடசாலை ஆசியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)