
posted 22nd December 2022

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் புதன்கிழமை (21) மேற்கொள்ளப்பட்டன.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனொரு கட்டமாக யாழ்ப்பாணத்திலும் நேற்று பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஒரு சிலர் அதிகாரிகளிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டனர்.
அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)