கழிவு பிளாஸ்ரிக் பொருட்கள் அகற்றப்பட உதவிய மன்னார் றோட்டரி கழகம்

தலைமன்னார் கிராமம் கடற்கரையோரப் பகுதியிலுள்ள சுற்று சூழல் துப்பரவு செய்யும் பணி மன்னார் றோட்டறி கழகத்தினதும் அதனுடன் இணைந்த கழகங்களும் மேற்கொண்டு பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை அகற்றியுள்ளனர்.

மன்னார் றோட்டறி கழகத்தின் மன்னார் றோட்டறி கழகத்தின் தலைவர் றொபின் ஜெயரூபன் ஏற்பாட்டில் றோட்டறி கழகத்தினுள் புதிதாக உள்வாங்கப்பட்ட பாடசாலை மாணவர்களைக் கொண்ட மன்னார் நகர றோட்டரிக் கழக இளைஞர்களும் தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலை இன்ரறக்ட் கழக மாணவர்களும் இணைந்து தலைமன்னார் கிராமம் கடற்கரையோரப் பகுதிகளை புதன்கிழமை (07.12.2022) காலை 8.00 மணி தொடக்கம் 10 மணி வரை சுத்தம் செய்தனர்.

அங்கு கடற்கரையோரத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் போத்தல்கள் என்பன அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இன்ரறக்ட் கழக பொறுப்பாசிரியர் போல் அவர்களின் தலைமையில் மாணவர்கள் வழிநடாத்தப்பட்டனர்.

அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் குறித்த இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிரமதானத்திற்கான பைகள் மற்றும் கையுறைகளை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கழிவு பிளாஸ்ரிக் பொருட்கள் அகற்றப்பட உதவிய மன்னார் றோட்டரி கழகம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)