
posted 22nd December 2022


திருமதி நூர்ஜஹான் பீவி அலி அக்பர்
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கடந்த எட்டு வருடங்களாக ஆரம்பக் கல்வி ஆசிரியராகக் கடமையாற்றி வந்த திருமதி நூர்ஜஹான் பீவி அலி அக்பர் அவர்கள் தனது 56ஆவது வயதில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
1992ஆம் ஆண்டு ஆசிரிய நியமனம் பெற்று சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் தனது கல்விப் பணியினை ஆரம்பித்த இவர் 30 வருட காலம் பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியப் பணியாற்றியுள்ளார்.
இவர் கரவாகு தெற்கு கிராம சபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் ஐ. அலியார் தம்பதியரின் கடைசிப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022.12.15 ஆம் திகதி முதல் ஓய்வுபெற்ற இவருக்கு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் பாடசாலை சமூகத்தினால் பிரியாவிடையளிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)