
posted 3rd December 2022
கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேச சபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்துக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நேற்று வெள்ளி மூன்றாவது நாளாகவும் நடைபெற்றது.
கடந்த 30ஆம் திகதி யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லூண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டச் சென்றவேளை, குப்பைகளை ஏற்றி வந்த எட்டு வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
ஆனால், நேற்று அங்கு எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை.
இந்நிலையில் மூன்றாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)