
posted 23rd December 2022

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார விழா இன்று (23) வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆ. சிறி தலமையில் புலோலி கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்கள் மங்கல வாத்திய இசையுடன் மலர்மாலை அணிவித்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு விழா மண்டபத்தில் மங்கல விளக்குகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைகளத்தின் பிரதி பணிப்பாளர் திருமதி இராஜமல்லிகை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆ. சிறி, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச. அரியகுமார், தற்பாக்கு கலை ஆசிரியர் ரட்ணசோதி உட்பட பலரும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து, மங்கள இசை, வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றதுடன் வரவேற்பு உரையை பருத்தித்துறை உதவி பிரதேச செயலர் தயானந்தன், நிகழ்த்தியதை தொடர்ந்து தலமை உரையை பருத்தித்துறை லிரதேச செயலர் ஆ. சிறி நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் உரைகள் இடம் பெற்றன. இதேவேளை சாதனை ஆளர்களுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பிரதேசத்திற்க்கு உட்பட்ட கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)