
posted 28th December 2022

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு நிகழ்வு தொடர்பில் அதன் உயர்மட்டப் பிரதிநிதிகளான மௌலவி ஏ,எல்.எம்.கலீல்,மௌலவி புர்ஹான் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை,கட்சியின் "தாருஸ் ஸலாம்" தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கை முஸ்லிம்களை சன்மார்க்கத்தின் அடிப்படையில் நெறிப்படுத்துவதோடு,நாட்டின் ஏனைய சமூகத்தினர் மத்தியிலும் நல்லிணக்கத்தைப் பேணி,பலதரப்பட்ட பணிகளை ஆற்றிவரும் இவ்வமைப்பு ஹிஜ்ரி 1344 (1924) இல் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகப் பயணிப்பதையிட்டு புளகாங்கிதம் அடைவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தம்மைச் சந்தித்துரையாடிய உலமாக்களிடம் கூறியதோடு,குரல் பதிவொன்றையும் வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)