
posted 7th December 2022
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் செவ்வாய்க்கிழமை (06) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்றைய தினம் மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நல்லூர் முருக பெருமான் வெளிவீதியுலா வந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)