
posted 22nd December 2022

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் சார்பில் நேற்று புதன் (21) வடமாகாண ஆளுநருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநருக்கான மகஜர் கையளிக்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டொன் போஸ்கோ மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)