posted 21st December 2022
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை கொண்ட கஞ்சா கலந்த மாவா கைப்பற்றப்பட்டது.
இதன் போது கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தான் தொடர்ச்சியாக
பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா விற்பனை செய்வதாகவும், தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும், நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)