
posted 26th December 2022

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார்.” (லூக்கா 1 ; 68).
செக்கெரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இவ் அருள் வாக்கின்படி இறைமகன் யேசுநாதர், வல்லபமிக்க மீட்பர், நமக்காக நம் பகைவரிடமிருந்தும், நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பதற்காகப் பிறந்தார்.
இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட இம்மனித குலத்தை பாவங்களிலிருந்து மீட்பதற்காகவே கடவுள் தம் ஒரே மகனாம் யேசுநாதரை இவ்வுலகிற்கு அனுப்பினார்.
மனித குலத்தையே மீட்கவந்த இறைமகனுக்கு பிறப்பதற்கு விடுதிகளில் இடம் கிடைக்காத்தால் மாட்டுத் தொழுவத்தில்தான் அவர் பிறக்க இடம் கிடைத்தது.
இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட இம்மனித குலத்தை பாவங்களிலிருந்து மீட்பதற்காகவே கடவுள் தம் ஒரே மகனாம் யேசுநாதரை இவ்வுலகிற்கு அனுப்பினார்.
இந்நாளினை உலகம் வாழ் கிறீஸ்த்தவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் பருவம் (Christmas Season) எனக் கொண்டாடுகின்றார்கள். இக் கிறிஸ்மஸ் பருவமானது 25ஆம் திகதி மார்கழி மாதம் தொடக்கம் 8 நாட்கள் வரை பரந்திருக்கும்.
இவ்வாறு பிறந்த இறைமகனினை வரவேற்கும் கொண்டாட்டங்களை பார்க்கும் போது மிகவும் ஆனந்தமாகவும், அகமகிழ்வாகவும் இருக்கின்றது.
இலன்டன் மாநகரில் (ஹன்வெல்)
இலன்டன் மாநகரில் (வைற்சிற்றி)
இலன்டன் மாநகரில் (ஹெயிஸ்)
அயர்லான்ட்
ஸ்ருட்காட் (யேர்மனி)