
posted 9th December 2022
மண்முனை தென்னெருவில் பற்று பிரதேச செயலகம் உணவு நெருக்கடியை தவிரக்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது இதன்படி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியகல்லாறு ஓந்தாச்சிமடம் களுதாவளை தேற்றாத்தீவு ஆகிய கிராமங்களில் உள்ள மாதர் சங்க அங்கத்தவர்கள் 173 பேருக்கு உணவு நெருக்கடியை தவிர்க்கும் வகையில் தலா ஒரு மூடை நெல் இப் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டது.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி காமினி யூட் இன்பராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி - தரணிதரன் அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நெல் மூடைகளை வழங்கி வைத்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)