
posted 3rd December 2022
வவுனியா சேமமடு கிராமத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 29 பேரை நினைவு கூரும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (02) சேமமடுவில் இடம்பெற்றது.
இதன்போது புலம் பெயர்ந்து வாழும் கிராமத்தவர்கள் நிதிப் பங்களிப்பில் சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கிராமத்தில் 1000 மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதைவேளை, கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து ஆதிவிநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)