
posted 14th December 2022
இயற்கை அனர்த்தத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ள கால் நடை வளர்ப்போருக்கு உடனடி நிவாரணம் வழங்கி இன்றைய பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் இம் மக்களுக்கு விமோசனம் கிடைக்க வழிசமைக்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபா குகதாஸ் விடுத்திருக்கும் செய்தியில்;
அண்மையில் ஏற்பட்ட காலநிலை அனர்த்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்துக்கு அதிகமான கால் நடைகள் இறந்துள்ளன. இதனால் இவ் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல கோடி ரூபா பெறுமதியான தங்களது கால்நடைகளை இழந்துள்ளமையால் அவர்களது வாழ்வாதார மீட்சிக்கு அரசாங்கம் விரைவாக இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க செயலாளர்கள் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)