
posted 4th December 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறையும், அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் இணைந்து ஏற்பாடு செய்த 'இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு நேற்று (02) வெள்ளி பிற்பகல் 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் சிரேஸ்ர விரிவுரையாளர் சி. திருச்செந்தூரன் தலமையில் இடம் பெற்றது.
இதில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் 'இனப்பிரச்சினை சார்ந்து அரசியல் தீர்வுக்கான வாய்ப்பும் யதார்த்தமும்-2022' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியதுடன் சபையினரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இக் கருத்தாடல் நிகழ்வில் விரிவுரையாளர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடல்ஔ மார்கழி மாதத்தின் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளில் கடந்த கால தீர்வு நகர்வுகளான 13ஆம் திருத்தம், பிராந்தியங்களின் ஒன்றியம், தமிழ் மக்கள் பேரவையினதும் வடமாகாண சபையிதும் தீர்வு திட்டங்கள் மற்றும் சமஷ்டி முறைமைகள் பற்றி புலமைத்தள உரையாடலும் பார்வையாளர் கலந்துரையாடலும் இடம்பெற உள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)