
posted 31st December 2022

பின்தங்கிய கிராம அபிவிருத்தி வீட்டுக் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதனூடாக பொருளாதாரத்தை மேம்பாட்டைய முடியும் என்ற நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ஆடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் பயனாளிக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனிபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், கணக்காளர் ஐ.எம். பாரிஸ், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம். அஸ்லம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், திட்டமிடல் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களும் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)