
posted 15th December 2022
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று வியாழன் (15) இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
- “வடக்கு ஆளுநரே மோசடிகளுக்கு ஆதரவா?”
- “பேஸ்புக் செயலாளர் வடக்கு கல்வியில் எதற்கு?”
- “வடக்கு கல்வியை திருடர்களின் கூடாரமாக்காதே!”
- “அடிமைச் சேவகம் புரியும் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே!”
என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை அழைத்த வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார். அத்துடன், இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாகவும் உறுதியளித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)