
posted 9th December 2022
நாட்டின் பெரும்பாலாக, கிழக்கிலும், வடக்கிலும் மிகவும் அனர்த்தமான காலநிலை நிலவி வரிவதால், வடக்கில் வாழும் பொதுமக்கள் அத்தியாவசிய அலுவல்கள் தவிர வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் து. சுபோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின் சில பகுதிகளில் வளியில் தர சுட்டெண் சற்று உயர்வாக காணப்படுகின்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
இது சாதாரணமாக வளி மண்டலத்தில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றத்தின் மூலம், அதாவது, காற்றின் வேகம், காற்றின் திசை மற்றும் தாழமுக்க மாற்றத்தின் காரணமாக வளியில் காணப்படும் சில மாசுக்கள் இலங்கையில் செறிவடையக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இச் சுட்டெண் அதிகரித்துக் காணப்படுவதனால், மக்கள் பொதுவாக அவதானமாக நடமாடுவதும், அவதானமாக இருபதும் மிகவும்வும் நல்லது.
அதே நேரம் கடந்த இரு நாட்களாக மழையுடனான காலநிலை காணப்படுவதனால், வளித்தர சுட்டெண் கிடைக்கப்பெற்ற அறிகையின்படி குறைந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது ஒரு சாதகமான அறிகுறியாகும்.அறிகுறியாகும்.
இது தொடர்பில் மக்கள் பெரிதாக பீதிகொள்ளத் தேவையில்லை.
ஆனால், நாள்பட்ட நோயாளிகள், வயதில் மூத்தவர்கள், சிறுவர்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.
இச் சுட்டெண்ணானது குறைவதனால் இன்னும் ஒரிரு தினங்களில் இவ் அசாதாரண நிலை குறைவடைந்த சாதாரண நிலைக்கு வரக் கூடிய வாய்ப்புகள் மிகவும் சாத்தியமாக காணப்படுகின்றது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)