201 ஆவது வருடாந்த கொடியேற்றவிழா
201 ஆவது வருடாந்த கொடியேற்றவிழா

கிழக்கிலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப்பின் 201 ஆவது வருடாந்த கொடியேற்ற விழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

தேசிய ரீதியிலும் புகழ்பூத்த இந்த நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப்பின் கொடியேற்று விழா வழமை போன்று 24.12.2022 அன்று சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

அரச வர்த்தமானி பத்திரிகை மூலம் தேசிய கலாச்சார விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக் கொடியேற்று விழா தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறவுள்ளது.

துயர் பகிர்வோம்

கொடி இறக்கும் இறுதி தினமான எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் லுஹர் தொழுகையின் பின் மாபெரும் கந்தூரி அன்னதானம் இடம் பெறுவதுடன்,

நாட்டின் சமாதானத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

சங்கைமிகு சாஹூல் ஹமீது ஒலியுல்லாஹ்வின் வருடாந்த நினைவு வைபவமாக இக்கொடியேற்று விழா இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனைக்குடி கடற்கரை எல்லையிலிருந்து 20 மீற்றர் எல்லையில், இருக்கும் இரு பெரிய சிறிய மினராக்களும், கடல் எல்லையிருந்து 40 மீற்றர் எல்லையிலிருக்கும் அழகிய தர்ஹாவும் கடந்த 2004.12.26 ஆம் திகதி ஏற்பட்ட கடற்கோள் பேரலைகளினால் தாக்கப்பட்ட போதிலும் தர்ஹாவும், மினராக்களும் எவ்வித சிறுசேதங்களுமில்லாமல் கம்பீரமாக இன்றும் காட்சியளிப்பது பேராச்சரியாமாகும்!

201 ஆவது வருடாந்த கொடியேற்றவிழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)