
posted 1st December 2022
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சி மனறங்களின் உறுப்பினர்களது எண்ணிக்கையினை குறைப்பதனை நோக்ககாக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணயக் குழுவிற்கு அவசியமான பரிந்துரைகளை செய்தவற்கென கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கவும், கருத்துப் பகிர்வுக்குமான நிகழ்வு ஒன்றை கொழும்பில் நடாத்தியது.
கிழக்கு மாகாணத்திற்காக, ஓட்டமாவடியில் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றதைப் போன்று, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000இல் இருந்து 4000 ஆக குறைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணயக் குழுவிற்கு கட்சியின் சார்பில் அவசியமான பரிந்துரைகளைச் செய்வது தொடர்பில், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அவற்றின் தவிசாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுடனானன விளக்கமளிப்பும், கருத்துப் பகிர்வும் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலையில் நடைபெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)