
posted 12th December 2022
யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை மீண்டும் இன்று (12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன்னர் இந்தியாவின் Air alliance விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் முற்பகல் 11.30 மணிக்கு தரையிறங்கியது.
இந்த விமானத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கான இந்திய VIP மற்றும் பயணிகள் உட்பட 28 பேர் வருகை தந்தனர்.
இந்தியா பிரதிநிதிகளை அமைச்சர் மற்றும் இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, யாழ்.மாவட்ட அரச அதிபர் மற்றும், வடக்கு மாகாண ஆளுநர் சுற்றுலா துறை பிரதிநிதிகள், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தலைவர் ஜி.ஏ. சந்திரசிறி இந்தியத் துணைத் தூதுவர் ராஜேஸ் நட்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)