மன்னார் 'மெசிடோ' ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் (மெசிடோ) மேற்கொண்ட ஒழுங்கமைப்பின் கீழ் மனித உரிமைகள் ஒவ்வொருவரினதும் உரிமைகள் தொனிப் பொருளில் மன்னாரில் இத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இத் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள் சைக்கிள் பவனியாகவும், வாகனத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டு திறந்த வாகனத்தில் நின்றவாறு கைகளில் பதாதைகள் ஏந்தியவாறு மன்னார் நகரில் பிரதான பாதைகள் ஊடாக வலம் வந்ததுடன் முருங்கன் மற்றும் நானாட்டான் பகுதிகளுக்கும் சென்று முக்கிய இடங்களில் இம் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

இவ் இடங்களுக்கு சென்ற இக் குழுவினர் வாகனத்தில் இருந்தவாறு தங்கள் கைகளில் ஏந்தியிருந்த பதாதைகளில்

  • 'எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்'
  • 'பேச்சு சுதந்திரம் கல்விக்கான உரிமை மற்றும் சமூக பாதுகாப்புக்கான உரிமை'
  • 'உலகில் உள்ள யாவருக்கும் உரிமைகள் சமமமே'

போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு சென்றனர்.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான கையேடுகளும் வீதிகள் மற்றும் கடைத் தெருக்களில் விநியோகிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் 'மெசிடோ' ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)