
posted 11th December 2022
வடக்கு மாகாண பண்பாடலுவல்ள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலவலகங்களின் திணைக்களத்தின் அனுசரனையுடன் மன்னார் பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் பிரதேச கலாசார பெருவிழா.
இவ் விழாவானது மன்னார் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் செவ்வாய் கிழமை (13.12.2022) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருவாட்டி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி செபமாலை அன்புராசா அடிகளார் , மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் வை.பரந்தாமன் , மாவட்ட மேலதிக செயலாளர் (காணி) கே.எஸ்.வசந்தகுமார் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாடலுவல்ள் திணைக்களம் பணிப்பாளர் திருவாட்டி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா . மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி.வினோதன் , மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் செல்வி வி.டி.தேவராஜா ஆகியோர் கலந்து கொள்ளுகின்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)