
posted 18th December 2022
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.
வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது -78) என்பவரே வியாழக் கிழமை (15) மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்றவேளை 2007.05.17 அன்று கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
மகனைத் தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராக தீவிர பங்களிப்பு வழங்கிய நிலையில் மகனைக் கண்டுபிடித்து தரப் போராடியிருந்தார்.
அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக் குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக மகனை காணாமலேயே அவர் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)