
posted 1st December 2022
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கின் பாதுகாவலியாம் புனித வெற்றிநாயகி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றுவரும் நவநாட்களில் இரண்டாம் நாள் பேசாலை மண்ணின் மைந்தன் அருட்பணி எஸ். செலஸ்ரீன் மஸ்கிஞ்ஞ அடிகளார் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்றைய (01) வழிபாட்டின் சிந்தனை மையப்பொருளாக 'விசுவாசத்தில் உறுதிபெறும் கிறிஸ்தவ ஒருங்கியக்க வாழ்வு' என்பதாகும்.
திருப்பலியில் மறையுரையாளராக அருட்பணி பி. றொனால்ட் சுஜீவன் (சிஎம்எவ்) அடிகளார் திகழ்ந்தார்.
ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மரியாயின் சேனையினர் இத் தினத்தை சிறப்பித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)