பலவகைச் செய்தித் துணுக்குகள் - 10.12.2022

தாழமுக்கத்தினால் ஏற்பட்ட தாக்கம்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சூறாவளியின் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து நிலவிய கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையின் காரணமாக தற்போது வரை 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி என் சூரியராஜ்தெரிவித்தார்

38 குடும்பங்களைச் சேர்ந்த142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 சிறுதொழில் முயற்சியாளர்கள்பாதிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாயில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பாக நல்லூர், பருத்தித் துறை ஊர்காவற்துறை கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது

மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நாளை வரை எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்.

உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு சிகிச்சை

உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு சிகிச்சையளிக்கப்பட்டதுடன், காலநிலை பாதிப்பு தொடர்பில் ஆராயப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அந்தந்த திணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த பாதிப்புக்கள் தொடர்பில், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் என பலரும் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன் குறிப்பிடுகையில், குறித்த பாதிப்பு தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்ட்டு உரிய முறையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இவ்வாறான காலநிலையின் போது, கால்நடைகளை அவதானமாக வைத்திருக்குமாறும் தெரிவித்தார்.

முதல் கட்டமாக, கால்நடைகளிற்கு அண்மித்து தீமூட்டி சூட்டினை வழங்குமாறும், பாதிப்புக்கள் ஏற்படின் கால்நடை வைத்தியர்களை அணுகுமாறும் தெரிவித்தார்.

மக்களின் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருவையாறு, கிளிநொச்சி நகரப் பகுதி மற்றும் கணேசபுரம், பாரதிபுரம் பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லாறு, தருமபுரம், பெரியகுளம், கல்மடுநகர், ஊரியான், கோரக்கன் கட்டுபோன்ற கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

சில தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்விடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலை காணப்படுவதுடன், கால்நடைகளும் இறந்து காணப்படுகின்றது.

சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 42 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 21 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 20 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 05 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 01 குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 09 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பாதிப்புக்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட இடர் முகமைத்துவ பிரிவு அவ்வந்த பிரதேச செயலகங்கள் ஊடக தகவல்களை திரட்டி வருகின்றது.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியில் வீட்டின் அருகில் நின்றிருந்த பனை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

“மண்டாஸ்” புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் மிதமான மழை மற்றும் அவ்வப்போது பலமாக காற்று வீசியது.

இந்நிலையிலேயே கரம்பன் பகுதியில் வீடொன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்துள்ளது.

எனினும் உயிராபத்துக்கள் எற்படவில்லை எனவும், பனை மரம் விழுந்ததால் வீட்டின் ஒருபகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள் - 10.12.2022

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழை மரங்களும் முறிந்தன.

இவ் சூறாவளி தாக்கத்தால் நேற்று இரவு யாழ். மத்திய வீதி, பலாலி வீதி மற்றும் கந்தர்மடச் சந்தியை இணைக்கும் பிரதான வீதியில் சமண்டலை மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இதனால் போக்குவரத்து செய்யும் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மேலும் நீர்வேலி, கோப்பாய், புன்னலைக்கட்டுவன், புத்தூர், வசாவிளான், உரெழு உள்ளிட வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைமரங்களும், வாழைக்குலைகளும் பெரும் அளவு முறிந்து காணப்பட்டன.

இதனால் விவசாயிகள் மிக அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள் - 10.12.2022

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)