
posted 14th December 2022
“பசுமையான தாயகம்" எனும் செயற்றிட்டத்தின் கீழ் செம்பியன்பற்றில் மரநடுகை நடைபெற்றது.
இச் செயற்றிட்டத்தின் கீழ், யா/செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியோடு மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.
சூலியலாளன் கணைச் செல்வனின் ஒருங்கிணைப்பில் "பசுமையான தாயகம்" எனும் செயற்றிட்டத்தினூடாக தொடர்ச்சியாக மரநடுகைகள் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)