
posted 19th December 2022
தீவக பிரதேசத்தில் மரங்களை நடுகை செய்து பசுமையாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ள சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு இன்றைய தினமும் வேலணை பிரதேசத்தில் பெறுமதி மிக்க மரங்களை நடுகை செய்துள்ளது.
இதன் மற்றொரு நடவடிக்கையாக வேலணைப் பிரதேச சபையின் ஆழுகைக்குள் உள்ள புங்குடுதீவு மற்றும் தீவக கல்வி வலயம் ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் பெறுமதிமிக்கதும் மக்களுக்கு பயன்களை தரக்கூடியதுமான மரங்களான மா, மகோக்கனி, மாதுளை, கொய்யா உள்ளிட்ட மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
வரண்ட பிரதேசமான தீவகத்தின் வளத்தை பாதுகாக்கவும் இயற்கையான சுற்றுச் சூழலை வழப்படுத்தும் நோக்குடனும் குறித்த திட்டம் முன்டினெடுக்கப்பட்டு வருவதான அந் நிறுவனத்தின் இணைப்பாளர் பாக்கியநாதன் சசிக்குமார் தெரிவித்துள்ளதுடன் அவர் மேலும் கூறுகையில்;
பசுமையான சுற்றுச் சூழலை கொண்ட இயற்கைச் சூழலில் எமது மக்கள் வாழவேண்டும். என்னுடன் எமது மக்கள் வாழும் பிரதேசங்களும் அவ்வாறே உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அத்துடன் இந்த பிரதேசத்தில் ஏற்கனவே மர நடுகை திட்டத்தினூடாக 25 ஆயிரம் பனைமர நாற்றுக்களும் சூழலுடன் ஒத்து வளரக் கூடியதுமான ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஏற்கனவே நடுகை செய்யப்பட்ட மரங்கள் மற்றும் நாற்றுக்கள் தற்போது நன்றாக வளர்ந்து வரும் நிலையில் நாம் எடுத்துக்கொண்ட செயற்றிட்டம் எமக்கு வெற்றியை தந்துள்ளது.
அந்த வகையில் இதற்காக ஒத்துளைப்புகளை வழங்கி வரும் வேலணைப் பிரதேச சபை மற்றும்.தன்னார்வலர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)