தமிழர் தரப்பு ஒன்றித்து செயல்பட வேண்டிய காலம் இது  - செல்வம் அடைக்கலநாதன்
தமிழர் தரப்பு ஒன்றித்து செயல்பட வேண்டிய காலம் இது  - செல்வம் அடைக்கலநாதன்

அரசியல் கைதிகள் 5 பேர் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறுவது நல்லபடியாக இருந்தாலும் அனைத்து அரசியல் கைதிகளிலும் விடுதலை செய்யப்பட வேண்டும். குறிப்பாக தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படும் ஒரு துர்பாக்கிய நிலை இருக்கின்றது. ஜனாதிபதி அவர்கள் இதை கவனம் எடுத்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியால் முடியும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும்?

இவ்வாறு பிரச்சனைகள் இருக்கையில் நாங்கள் உடனடியாக சென்று ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனை மலிவுபடுத்துகின்ற செயற்பாட்டினை செய்யக் கூடாது.

துயர் பகிர்வோம்

இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவ விட்டு விடாது தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் ரெலோ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்பொழுது அவர் மேலும் தெரிவிக்கையில்;

இப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டும் விடயம் ஜனாதிபதி அவர்களின் பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே.

எங்களைப் பொருத்தமட்டில் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம். அதில் இராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்து நிலங்கள் அபகரிக்கின்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானமாக அதைச் சொல்லி இருந்தோம்..

அந்த அடிப்படையில் ஜனாதிபதி இந்த 31 ஆம் தேதி வரையில் கால அவகாசம் கேட்டிருந்தார். அந்த வகையில் இராணுவம் எந்தெந்த இடங்களை விடப் போகின்றது என்ற கேள்வி இருக்கின்றது
பேச்சுவார்த்தையின் போது வரைமுறையோடு இராணுவம் கைப்பற்றிய சில இடங்களையும் எத்தனை ஏக்கர் எங்கெங்கு பிடிக்கப்பட்டு இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்ட இருக்கின்றோம்.

அதேபோல் மிக மோசமாக வயல் காணிகளையும், தங்களுடைய மக்களின் வீட்டுக் காணிகளையும் எல்லைகளை போடுகின்ற ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுகிறது.

பேச்சுவார்த்தை என்பது அவசரப்பட்டு செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பேச்சுவார்த்தை என்பது அனைவரையும் ஒன்று திரட்டுகின்ற அல்லது ஒற்றுமைப்படுத்துகின்ற செயற்பாடாக அமைய வேண்டும்..

ஆனால் இந்த 31 ஆம் திகதி வரை எந்த ஒரு திருப்ப முனையும் இல்லாத நிலை ஜனாதிபதி அவர்கள் அதில் எதிர்வரும் 10 , 13 வரை திகதிகளை நிர்ணயம் செய்திருக்கின்றார். அது எவ்வாறு சாத்தியமாகும் என்பது 31ம் தேதிக்கு முன்பு நாங்கள் வைத்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆணித்தரமாக இருக்கின்றோம், இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து..

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக அது சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கை காட்டுகிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முன்னைய நிதி அமைச்சர் ஒரு லட்சம் என்றும், இந்த நிதி அமைச்சர் 2 லட்சம் தருவதாக கூறுகிறார்கள்..

எங்களுடைய உறவுகளின் பெருமதி என்பது வெறும் 2 லட்சம் தானா? அவை நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும். .

மேலும் எங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக. அதற்காக பல போராளிகள், பல மக்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கின்றார்கள். ஆகவே நிலங்கள் விடுவிக்கப்படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்று போகும்.

அவ்வாறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட உடன் பிடிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆனால் இது எப்படி சாத்தியம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது தெரியாது.

ஆனால் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்தரபாகிய நாங்கள் சாதிக்க முடியும். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எங்களுடைய செயற்பாடுகளின்படி பேச்சுவார்த்தை என்பது இந்தியாவினுடைய அனுசரணையோடு ஏனைய நாடுகளின் உடைய மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன் வைத்திருக்கிறோம்.

இப்பொழுது நாங்கள் ஒரு கால வரையறையை கொடுத்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் அவை நடைபெற வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள் நல்ல நோக்கத்திற்காக இதனை கையில் எடுத்திருக்கிறாரா அல்லது பொருளாதாரப் பிரச்சனைகளை மேம்படுத்துவதற்காக செய்கின்றாறா என்றொரு கேள்வி இருக்கின்றது.

ஆனாலும் இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவ விட்டு விடக்கூடாது. ஆகவே தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்கின்ற பட்சத்தில் எங்களுடைய நிபந்தனைகளையும் எங்களுடைய கோரிக்கைகளையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றார்.

தமிழர் தரப்பு ஒன்றித்து செயல்பட வேண்டிய காலம் இது  - செல்வம் அடைக்கலநாதன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)