
posted 21st December 2022
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு “மாணவர் மகிமை" வேலைத்திட்டத்தின் கீழ் சாதனையாளர் கௌரவிப்பு விழா 2022 டிசம்பர் 23 ந் திகதி நடைபெற உள்ளது
பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நிந்தவூரில் உள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற உள்ள இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் எச். ஈ. எம். டபிள்யூ. ஜி. திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம் எஸ் சஹதுல் நஜீம், விசேட அதிதிகளாக சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் முகமைத்துவ பணிப்பாளர் ஓ எல் சப்ரி இஸ்மத், தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்புச் சபையின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் தம்பிலெப்பை இஸ்மாயில், கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம் .ஜே. இஸட். எம். ஜமால்டீன், கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் எம் எஸ் எம் இம்தியாஸ் ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்
கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் அனுசரணையுடன் நிந்தவூர் மண்ணில் இடம்பெற இருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் 2022 ம் ஆண்டு தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கபடி விளையாட்டு போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்த நிந்தவூர் கமு கமு அல் மதீனா மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் வீரர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற நிந்தவூர் கமு கமு அல் அஷ்ரக் தேசிய பாடசாலை வீரர்களும் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)