
posted 11th December 2022
வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நகரசபை ஊழியர்களும் பொலிசாரும் இணைந்து பிடித்து நகரசபையில் ஒப்படைத்துள்ளனர்.
உரியவர்கள் கால்நடைகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகளினால் அதிகளவு விபத்துகள் இடம்பெறுகின்றன என்று அண்மையில் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமையவே, இன்று 80இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பிடிக்கப்பட்டு நகர சபையில் ஒப்படைக்கப்பட்டன.
கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றின் அடையாளங்களை உறுதிப்படுத்தி தண்டப் பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும், அவ்வாறு பெற்றுக் கொள்ளத் தவறினால் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)