
posted 7th December 2022
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி மட்டக்களப்பு தாழங்குடா சீப்ரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இச்சுற்றுப் போட்டி மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் அ.பிரபாகரன் தலைமையில் வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட 13,15 வயதுப்பிரிவில் 45 அணிகள் பங்குகொண்ட இச் சுற்றுப் போட்டியின் இறுதி போட்டிகள் இன்று (07) மாலை இடம்பெற்றது.
இறுதிப் போட்டி நிகழ்வு அதிதிகளை வரவேற்றல், மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, விசேட அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்போட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயமும், 13 வயதுக்குட்டபட்ட பெண்கள் பிரிவில் தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயமும் வெற்றி பெற்றனர்.
15 வயதுக்குட்டபட்ட ஆண்கள் பிரிவில் தன்னாமுனை புனித யோசப் கல்லூரியும், 15 வயதுக்குட்டபட்ட பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு புனித சிசிலியாஸ் மகளீர் பாடசாலையும் வெற்றி பெற்றனர்
இறுதிப் போட்டிப் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ஜே. பிரபாகரனும், சிறப்பு அதிதிகளாக கோட்ட கல்வி பணிப்பாளர் சீ. தில்லைநாதன் மற்றும் கோட்ட பாடசாலை அதிபர்களும், கௌரவ அதிதியாக அனுசரனையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)