
posted 31st December 2022

கடலட்டைப் பண்ணைகள் வேண்டுமென கோரி நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.கோட்டைப் பகுதியில் இருந்து யாழ். பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணியில் ஈடுபட்டவர்களால் கடற்தொழில் அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.
பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்;
கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டைப் பண்ணைகள் பெரிதும் உதவுகின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும், மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை காணப்படுகின்றது.
சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடல் தொழிலும், அட்டைப் பண்ணையும் செய்யாதவர்கள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் முறையான அனுமதிகளை உரிய திணைக்களங்கள் ஊடாக பெற்றே அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளோம்.
அட்டைப் பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மக்களுக்கு பண்ணைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)