
posted 21st December 2022
கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை படைப்புக்கள் அரங்கை அலங்கரித்தன.
நாடகம், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகள் ஊடாக ஒளிவிழா நிகழ்வை மகிழ்வுடன் மாணவர்கள் கொண்டாடினர்.
குறித்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பங்கு தந்தையர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)