
posted 21st December 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணயக்குழு தேர்தல் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனான கலந்துரையாடலொன்றை 20.12.2022 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது யோசனைகளை முன் வைத்தது.
உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமாயின் வட்டார முறையை ரத்து செய்து முன்னைய விகிதாசார தேர்தல் முறையை கொண்டு வரவேண்டும் என்றும், கல்பிட்டி பிரதேச சபை நகர சபையாக மாற்றப்பட வேண்டும், புத்தளம் நகர எல்லைக்குள் இருக்கும் முள்ளிபுரம் மற்றும் மணல்தீவு ஆகிய வட்டாரங்கள் புத்தளம் மாநகர சபையுடன் இணைக்கப்பட வேண்டும், கல்முனை ஸாஹிராக் கல்லூரி முதல் பாண்டிருப்பு வரை தனியான சபை வேண்டும், என்ற கோரிக்கைகளை முன் வைத்ததுடன் இது பற்றிய மகஜர் ஒன்றை எல்லை நிர்ணய கமிட்டியின் தலைவர் மஹிந்த தேசப்பிரேமியிடம் கையளித்தது.
இதன் போது ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சப்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)