
posted 31st December 2022

இலங்கைக்கு கலாசாரம், மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கை, சீனா ஆகிய இரு நாடுகளின் நட்பு என்பது நட்பின் நண்பன். அந்த வகையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பு செய்வதற்கான உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இது சீனத் தூதரகத்தின் நிகழ்ச்சித் திட்டமாக காணப்பட்டுகின்றது.
மேலும் 9 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் எரிபொருள்கள் கிடைக்கப் பெறவுள்ளன. அவை யாழ்ப்பாண விவசாயிகள், மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
மேலும் 10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இலங்கைக்கு சீனா வழங்கவுள்ளது. இந்த அரிசி வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருக்கின்றது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)