
posted 18th December 2022
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராகப் பணியாற்றும் மா. இராமக்குட்டி திறமை அடிப்படையில் இலங்கை நிர்வாக சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொது எழுதுனர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர் எழுதுநகராக 1994. 06. 14ஆம் திகதி தொடக்கம் 1999. 06. 30 ஆம் திகதி வரை வாகரை பிரதேச செயலகத்திலும், 1999. 07. 01 ஆம் திகதி தொடக்கம் 2001. 08. 31ஆம் திகதி வரை பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திலும் கடமையாற்றினார்.
எழுதுநர்களுக்கிடையே நடாத்தப்பட்ட அதி சிறப்பு போட்டி பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த இவர் 1999. 07. 01 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் அதி சிறப்பு சேவைக்கு பதவி உயர்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இவர்;
- 2001. 09. 01ஆம் திகதி தொடக்கம் 2011. 06. 30 ஆம் திகதி வரை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராகவும்,
- 2011. 07. 01ஆம் திகதி தொடக்கம் 2012. 12. 31ஆம் திகதி வரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்வாக உத்தியோகத்தராகவும்,
- 2013. 01. 01 ஆந் திகதி தொடக்கம் 2018. 12. 31ஆந் திகதி வரை நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளராகவும்,
- 2019. 01. 01ஆந் திகதி தொடக்கம் இதுவரை கல்முனை வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தராக உள்ள நிலையில் இலங்கை நிர்வாக சேவைக்கு திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான இவர் துறைநீலாவணை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) என்பவற்றின் பழைய மாணவர் என்பதுடன் துறைநீலாவணையைச் சேர்ந்த காலஞ் சென்ற மாமாங்கம் மற்றும் கண்ணகை தம்பதியினரின் புதல்வராவார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)