
posted 21st December 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் 45ஆவது கட்டமாக 50இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு செவ்வாய் (20) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை நிர்வாகத்திடம் பஸ்ஸை எதிர்க்கட்சித் தலைவர் கையளித்தார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் விஜயராஜன் உள்ளடங்கலான கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)