அடையாள வேலை நிறுத்தம்

இலங்கை அஞ்சல் திணைக்கள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் இன்று திங்கட் கிழமை (12) குதித்தன.

திணைக்களத்தின் சகல தரஉத்தியோகத்தர்களும், ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்டதால் நாடளாவிய ரீதியில் அஞ்சல் சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் பிரதான தபாலகங்கள், உபதபாலங்கள் திறக்கப்படாது மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டன.

நீண்ட வரலாறு கொண்ட அஞ்சல் திணைக்கள சேவைகள் தனியார் மயப்படுத்துவதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடக்கோரும் பிரதான கோரிக்கையுடன், நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாதுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுமே இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக அறியவருகின்றது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொழிற்சங்கங்கள் தொடர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதிக்கும் நிலையேற்படுமென அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தலைவர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

அடையாள வேலை நிறுத்தம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)