
posted 1st December 2021


நூலாசிரியர் நூருல் அயின் நஜ்மில் ஹுசைன்
தமிழ் இலக்கியவானில் தடம் பதித்துவரும் பிரபல முஸ்லிம் பெண் எழுத்தாளரான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் “திதுலன தாரக்கா” (மின்னும் தாரகைகள்) எனும் சிங்கள மொழியிலான நூலின் வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெறவிருக்கின்றது,
இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சிங்கள மொழியிலான இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை (04.12.2021) கொழும்பு, அல்-ஹிதாயா தேசியக்கல்லூரி பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
தினகரன், தினகரன் வார மஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் தலைமையில் நடைபெறவிருக்கும் வெளியீட்டு விழாவில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதிகாயக்க கல்நது கொள்வார்.
அத்துடன் தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்லைவர் காதர் மஸ்த்தான், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அல்-ஹாஜ் இப்றாகீம் அன்ஸார், இலங்கை மகளிர் பணியக பணிப்பாளர் திருமதி. சம்பா உபசேன, இலங்கை வானொலி பணிப்பாளர் நாயகம், திருமதி. மயூரி அபேசிங்க, பொது நிருவாக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. மாலா பஸ் நாயக்க தொழிலதிபர், தேசமான்ய அல்ஹாஜ் எம்.ரி.பஹார்தீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாசின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் விழாவில்,
தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் அரபு மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தமிழில் நூலாசிரியர் அறிமுக உரையையும், அரச தகவல் திணைக்கள முன்னாள் தெசத்திய பிரதம ஆசிரியர் சுனித் மாயாதுன்னே சிங்களத்தில் அறிமுக உரையையும் ஆற்றுவார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்-ஹாஜ் என்.எம்.அமீன் நூல் நயவுரையும், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் வாழ்த்துரையும் வழங்குவர்.
அதேவேளை கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட அதிகாரி சட்டத்தரணி, நூருல் சப்னா சிராஜுதீன் ஆகியோர் கவிவாழ்த்தும் வழங்கவுள்ளனர்.
“எமது முஸ்லிம் பெண் ஆளுமைகளை பெரும்பான்மை சமூகத்திற்கு வெளிச்சமிட்டுக்காட்ட வேண்டும் என்ற பேராவல் என்னுள் எழுந்ததன் வெளிப்பாடே இந்த நூல்” என நூலாசிரியர் நூலாசிரியர் நூருல் அயின் நஜ்மில் ஹுசைன் கருத்து தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House