ஹக்கீம் நன்றி தெரிவிப்பு

இலங்கையை சேர்ந்த ஒருவர் பாக்கிஸ்தானில் மனிதாபிமானமற்ற முறையில் மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டதையிட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் துரிதமாக செயற்பட்டு, அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் நீதியமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, வியாழக்கிழமை (9) உரையாற்றிய போதே அவர் அவ்வாறு நன்றி கூறினார்.

இலங்கையர் ஒருவர் அங்கு அவ்வாறு கும்பலொன்றினால் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையிட்டு அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாகவும், அதையிட்டு ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும், பலத்த கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும் கூறிய அவர், அதனை மன்னிக்க முடியாத படுபாதகச் செயலென்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான கொலையின் பாரதூரம் பற்றி விளக்கும் அல்குர்ஆன் திரு வசனமொன்றின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் அவர் சபையில் வாசித்துக் காட்டினார்.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரியூட்டுவதை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதையும் அவர் நினைவூட்டினார்.

பாக்கிஸ்தானுடன் இலங்கை சிறந்த நட்புறவை பேணி வருகிறது என குறிப்பிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுவரும் நாடுகளிலொன்றான இலங்கை ஓர் இக்கட்டான சூழ்நிலையில் ஏனைய நாடுகள் பாக்கிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் போட்டியில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்ட நிலையிலும், இலங்கை வீரர்கள் அதில் பங்குபற்றியிருந்தபோது, பயங்கரவாத தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததையும் கூறினார். இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு தொடர்வதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் நன்றி தெரிவித்திருப்பது மன நிறைவை அளிப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்தார்.

இவ்வாறான கீழ்த்தரமான மனிதாபிமானமற்ற செயல் இனிமேல் இடம் பெறுவதற்கு அறவே இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.

ஹக்கீம் நன்றி தெரிவிப்பு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More
Varisu - வாரிசு - 06.12.2025

Varisu - வாரிசு - 06.12.2025

Read More