வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி- உமையாள்புரம் சோலை நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உமையாள்புரம்- சோலை நகர்ப் பகுதியில் எறிகணை ஒன்றை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல் வெட்டியபோது, அது வெடித்து சிதறியது.

அதில் 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஒரு சில வெடிபொருட்கள் அன்றைய தினம் அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில் நேற்று, விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு வளவுக்குள் இருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்