விபத்திற்குள்ளான வயோதிபர் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

விபத்தில் சிக்கி படுகாயமுற்ற வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஞானியார் வளவு, வியாபாரிமூலை, பருத்தித்துறையை சேர்ந்த பரஞ்சோதி சற்குணநாதன் (வயது- 80) என்பவராவார்.

கடந்த 18ஆம் திகதி கூலர் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்த இவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கிருந்து கடந்த திங்கட்கிழமை(20) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை(22.12.2021) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுனர் காயம் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான வயோதிபர் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House