
posted 8th December 2021
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்குகமைவாக இரண்டரை மணி நேரம் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்குகமைவாக வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இவ் விசாரனையானது செவ்வாய் கிழமை (7.12.2021) காலை 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விசாரனையின்போது, கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள் நடாத்திய நிகழ்வுகள் தொடர்பாகவும், குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்ததாகவும் தெரிவித்தார்.
எம்மை சிவில் சமூக செயற்பாடுகளில் இருந்து எமது சனநாயக குரல்வளையை நசுக்கும் விதமாகவே அவர்களின் கேள்விகள் காணப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தார். சிவில் அமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அரங்கில் ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், மறு புறத்தில் சிவில் அமைப்புக்களை நசுக்க முனைகிறது அரசின் புலனாய்வு அமைப்புகள்.
அரசின் இவ்வாறான நெருக்கடிகளைச் கண்டு நாம் அச்சப்படப்போவதில்லை. இவ்விதமான விசாரணைகள் எமக்கு புதியவை அல்ல. எனவே எமது சமூகப்பணி தொடர்ந்து தொடரும் என்பதுடன் சிவில் சமூக அமைப்புக்களை இலங்கை அரசு தொடர்ந்து நசுக்க முனைவது வேதனைக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House