வாழும்போதே வாழ்த்துதல் விருது வழங்கும் நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கை முதலுதவி சங்கத்தின் 46 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 2021 ஆம் ஆண்டுக்கான வாழும்போதே வாழ்த்துதல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோண்டாவில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது.

இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய ஆணையாளர் சிவத்திரு வை மோகனதாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்வில் நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலவன் சுவாமிகள் திரு முன்னிலை வகித்தார்.

இதில் பிரதம அதித்தியாக வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு. மோகனதாஸ், சிறப்பு அதிதிகளாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன், யாழ் மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாழிகிதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசி உரையை சிவகுரு ஆதீன குருமுதல்வர் வணக்கத்திறக்குரிய வேலவன் சுவாமி வழங்கியதை தொடர்ந்து தலமை உரையை இலங்கை முதலுதவி சங்க தேசிய ஆணையாளர் வை. மோகனதாஸ் வழங்கினார். கருத்துரையை யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் நிகழ்த்தினார்.

இதில் தேசகீர்த்தி, சமூக ஜோதி, மக்கள் திலகம், ஆகிய விருதுகள் 60 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறப்பாக செயலாற்றிய 40 இலங்கை முதலுதவி சங்க தொண்டர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வாழும்போதே வாழ்த்துதல் விருது வழங்கும் நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House