
posted 3rd December 2021
மகேந்திரா ரக வாகனம் ஒன்றை புகையிரதம் மோதி தள்ளியதில் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை(03) பிற்பகல் மிருசுவில் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் தவசிக்குளம் கொடிகாமத்தை சேர்ந்த சூசைநாதன் பிரதீபன் (வயது- 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி நிருபர் மகேந்திரா ரக வாகனம் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் மோதி தள்ளியது.
இதில் படுகாயமடைந்த வாகனச் சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House