
posted 27th December 2021

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம், ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம்
தழிழர்களுக்கான தீர்வு சுயாட்சியாக இருந்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தற்காலிகமாவேனும் அமுல்படுத்தவதற்கு தமிழ்த் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் வரவேற்கத்தக்கது. இதை வலுவுள்ளதாக மாற்றுவதற்கு விடா முயற்சியுடன் செயற்படுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம், ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் அறைகூவல்.
1989ஆம் ஆண்டு இருந்து இன்றுவரையும் முப்பத்தி மூன்று வருடங்களாக மாகாணமுறை நிருவாகம் அமுலில் உள்ளன. இது பாராளுமன்றத் சட்டத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட ஒரு அரசியல் அதிகாரமாகும். இது இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 13ஆவது திருத்தச்சட்ட அரசியல் அதிகாரத்திலுள்ள சில அதிகாரங்கள் மாகாண முறைமைக்குக் கீழ் கொண்டு வரப்படவில்லை. பல விடயங்கள் மத்திக்கும், மாகாணத்திற்கும் பொதுவாக உள்ளன. சில விடயங்கள் மட்டுமே மாகாணத்திற்கென தனியாக உள்ளன.
13றைப் பொறுத்தவரையில் சிறுபான்மை இனத்திற்காக வடக்கு, கிழக்கை இணைத்து ஒரு மாகாண சபையாக இயங்கி வந்த நிலையில் பல அதிகாரங்கள் மாகாணசபை நிருவாகத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டன. இது காலப்போக்கில் இனவாத அரசினால் சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணசபை 30.06.2006ம் ஆண்டு காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு இணைத்த முறைமை தவறென பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரினால் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாண சபை நிருவாகம் கிழக்கு வேறாக, வடக்கு வேறாக பிரிக்கப்பட்டது. இத்தோடு, மாகாண நிருவாகத்திற்கென உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களான பிரதேச செயலகத்திற்கு கட்டுப்பட்ட சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப் பட்டதோடு பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், நிதி தொடர்பான அதிகாரங்கள், விவசாய, நீர்பாசனத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரங்கள், வரி அறவீடு, பொதுச்சேவை, மற்றும் பொது நிருவாகத்தின் கீழுள்ள அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துக் கொண்டது.
குறிப்பிட்ட அதிகாரங்களை மத்தியஅரசு எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அதிகாரங்கள் மாகாணசபை முறைமையின் கீழுள்ள நிலையில் முன்பு இல்லாமல் இருக்கும் அதிகாரங்களை மீளப் பெறுவதற்கும் தமிழர்கள் ஆகிய நாங்கள் உள்ளதை சிறப்பாக செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.
இதேவேளை அரசு சிறுபான்மை இனத்திற்கு உள்ள அதிகாரத்தை இல்லாமலாக்குவதோடு, புதிய அதிகாரங்களைத் தர மறுக்கின்ற செயல் வடிவத்தை இல்லாமலாக்குவதற்கும், சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தமிழ்த் தலைமைகள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
கடந்த காலத்தில் மாகாண சபையை அதிகாரம் உள்ளதாக மாற்றுவதற்கு தமிழ்த்தலைமைகள் எந்தளவிற்கு வலுவாகச் செயல்பட்டன. விரும்பிச் செயல்பட்டன என்பதை மீளாய்வு செய்து கொண்டு விட்ட தவறுகளை சுய விமர்சனம் செய்து கொண்டு எதிர் காலத்தில் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க தமிழ்த்தலைமைகள் கூடிப்பேசி ஒரு தீர்மானத்திற்கு வந்தது நல்ல முன்னுதாரணமாகும்.
ஆட்சி செய்யும் அரசுடன் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பெறுவதற்கும் சமூக நலன் தொடர்பாக விகிதாசார முறையில் அபிவிருத்தி செய்வதற்கும் அரசுடன் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆளும் தரப்புடன் பேசுவதூடாகவே பிரச்சினைகளை தீர்க்க முடியும். கடந்த காலங்களில் மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரான வினோதமான செயற்பாடுகளில் செயல்பட்டு வந்தது மட்டுமல்லாமல் இது தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அதிகாரப் பரவலாக்கலையும், அபிவிருத்தியையும் சமூகம் ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ்த்தலைமைகள் இவ்விடயத்தில் உள்ளடக்கப்பட்ட அதிகார பரவலாக்கல் தொடர்பாக கூடி முடிவெடுக்கப்பட்டது. தமிழர்களின் மத்தியில் நல்லதொரு விழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத் தலைமைகள் சிறப்பாக இவ்விடயத்தை செயல்படுத்த வேண்டுமென மக்கள் ஆர்வமாக உள்ளனர் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம், ஈ.பி.ஆர்.எல்.எப். இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House