
posted 28th December 2021

லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி-உதயநகர் பகுதியில் வசித்த வயோதிபப் பெண் ஸ்கந்தபுரம் முதலைப் பாலத்தில் உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த பெண்ணைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
லண்டனில் மகனுடன் வசித்து வந்த அவர் மூன்று வருடங்களின் முன் இலங்கை திரும்பியுள்ளார்.
கிளிநொச்சி அம்பாள் குளம் உதயநகர் பகுதியில் உள்ள காணியை பார்ப்பதற்காக குறித்த பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.
தனியாக வசித்து வந்த அவர் நேற்று வங்கிக்குச் சென்று திரும்பியுள்ளார். பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல்போயுள்ளார்.
அந்தப் பெண் இவ்வாறு காணாமல்போயுள்ள விடயம் நேற்று இரவு 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் காணாமல்போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரியைமாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
இவ்வாறு காணாமல்போன பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்தது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House