யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (10) யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இந்த போராட்டத்தில் சர்வதேசமே எமக்கு நீதிபெற்று தர வேண்டும், இலங்கை அரசாங்கம் எம்மை ஏமாற்றுகின்றது, நமக்கு இழப்பீடு வேண்டாம், மரணச் சான்றிதழ் வேண்டாம், ஓ.எம்.பி வேண்டாம் எமக்கு எமது பிள்ளைகள் மட்டுமே வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House