
posted 22nd December 2021
உண்ணி காய்ச்சல்,டெங்கு,மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனானந்தா தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
உண்ணிக் காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில், தோட்டங்களில் வேலை செய்யும்போது தொற்றுகின்ற நோயாக காணப்படுகின்றது. இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பாதுகாக்கலாம். நாய் பூனைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல்வேண்டும். காய்ச்சல் வரும்போது உரிய மருத்துவ சிகிச்சை பெறவேண்டும்.
அதே போல டெங்கு காய்ச்சலும் இந்த மழையுடன் அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 10 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்கள். எனவே, பொதுமக்கள் தம்மை டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும்.
அத்துடன் சில நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு மலேரியா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது அனோபிலஸ் நுளம்பினால் பரப்பப்படுகின்ற நோயாகும்.
எனவே யாழ்.போதனா வைத்திய சாலையினை சூழ உள்ள ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
குறிப்பாக கட்டடங்கள், புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் என்பவற்றில் நீர் தேங்கி இந்த நுளம்பு பெருகும். எனவே, மலேரியாவை எமது நாட்டில் மீண்டும் செய்யாது சுற்று சூழலை பாதுகாக்கும் வேலைகளை ஒவ்வொருவரும் பொறுப்புடன் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இலங்கை மலேரியாவைக் கட்டுப்படுத்தி உலக சுகாதார நிறுவனத்தினால் பாராட்டைப் பெற்றது. இதேபோல் 1963 ஆம் ஆண்டளவில் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டு கவனக்குறைவினால் மீள பரவியது.
மலேரியா பரப்புகின்ற நுளம்பு எமது பிரதேசத்தில் காணப்படுகின்றமையினாலும் தற்போது நோயாளி இனங்காணப்பட்டுள்ளமையாலும் நாங்கள் நுளம்பினை கட்டுப்படுத்தவற்குரிய கவனம் எடுத்தல் வேண்டும்.
அத்தோடு சுகாதாரப் பிரிவினர் நுளம்பு குடம்பிகளில் மலேரியா நோய் தன்மை உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.
எனவே, எமது முயற்சியின் பயனாகவே இதனை தடுக்க முடியும். குறிப்பாக மலேரியா நோய் உள்ள நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயமாக தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்தோடு அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது கட்டாயமாக மலேரியா பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். இவை அனைத்தும் யாழ்.போதனா காணப்படுகின்றன. அதனை பொதுமக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனினும் மலேரியா நோய் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதனால் இலங்கையில் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. ஆனால், வெளிநாடுகளில் இருந்து அதாவது மலேரியா தோற்று உள்ள நாடுகளில் இருந்து இங்கு வருவோர் கட்டாயமாக தமக்குரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House